Blogger Widgets

Tuesday, December 31, 2013


சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற 

பொன்மொழிகளில் சில...




உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்!

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்
 



Thanks for google search


As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 



தோல்வியடைய 10 வழிகள்.....





1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.

2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்.

3. மேனேஜரோ,சிஇஓ-வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.

4. நான் தவறே செய்ய மாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.

5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.

6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.

7. வெளியாட்களின் சிறப்பறிவை (Experts) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.

8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.

9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.

10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல் படுங்கள்.





Thanks for google search
As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 

Wednesday, December 25, 2013


சிரிக்க ரசிக்க மட்டுமே

வாழ்க்கைல சில விஷயம் நம்மல தானாவே சிரிக்க வைக்கும் :

* லவ்வர் அனுப்புற மெசெஜ் படிக்கும் போது.

* விஜயகாந்த் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல்ல 
போட்டியிட அரிக்கை விட்டா!!

* பஸ்ல போகும் போது குழந்தை முகத்தை பார்த்தா!!

* அம்மா., அப்பாகிட்ட நம்மல பத்தி புகழ்ந்து பேசும் போது,

* நண்பர்கள் சீரியசா அட்வைஸ் பண்ணும் போது
,
* காதலன்/காதலி அமைதியா சேர்ந்து இருக்கும் போது,

* நண்பன் கிளாஸ்ல செமினார் எடுக்கும் போது!

* காதல் தோல்வியில் 'நங்நங்நங் :' என்று சிரிப்பது

As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 

3

ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் 100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது




அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட்.
இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது.

சாம்சங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, அட்ரஸ் மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த அட்ரஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள் ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள். 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன.

Posted Image


100 கோடி டாலருக்கும் சில்லரை. இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.


நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சங்.எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எல்லா ஸ்மார்ட் போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள்.எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும். எப்புடி... என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.
Posted Image
Thanks for google search
As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 


Related Posts Plugin for WordPress, Blogger...